ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஜன.8 முதல் பொங்கல் பரிசு விநியோகம்... முதல்வர் தொடங்கி வைப்பு!
தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே, இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் ஜனவரி 8-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான அரசாணையை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா சாஹு நேற்று அதிரடியாக வெளியிட்டுள்ளார். அதன்படி, 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து வரும் 4 அல்லது 5-ம் தேதிகளில் ரேஷன் ஊழியர்கள் மூலம் உங்கள் வீடுகளுக்கே வந்து டோக்கன்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது.

பரிசு தொகுப்பு உறுதியான நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் "ரொக்கப் பணம்" குறித்த அறிவிப்பின் மீதுதான் உள்ளது. கடந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு மக்கள் நலன் கருதி ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்பது குறித்து இன்றோ அல்லது நாளையோ முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
