பொங்கல் பரிசு… குறை இருந்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்!

 
பொங்கல்
 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளது. இதனுடன் இலவச வேட்டி, சேலையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பொங்கல்

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் குறைபாடு ஏற்பட்டாலோ, ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலோ உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 1967 மற்றும் 18004255901 என்ற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசுத்தொகுப்பு

மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!