பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு!

 
பொங்கல்
 

தமிழ்நாட்டின் அடையாள பண்டிகை பொங்கல். இந்த பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் பொங்கலுடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2023, 2024-ல் ரூ.1,000 வழங்கப்பட்டாலும், நடப்பாண்டில் ரொக்கம் இல்லை.

பொங்கல்

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொங்கல் பரிசுடன் ரூ.3,000 வரை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் உள்ள 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான பொருட்கள் கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ளன. நிதிச் சுமை, செலவீன வாய்ப்பு குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.

பொங்கல்

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் பொங்கல் என்பதால் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்தாண்டு குறைந்த பொருட்கள் வழங்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி ஏற்பட்டது. அதனை ஈடு செய்ய இந்த முறை பெரிய அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!