விடுபட்டவர்களுக்கு நாளை முதல் ரூ3000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்க உதவி வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ந்தேதி தொடங்கி வைத்தார். டோக்கன்கள் வழங்கப்பட்டு பரிசுத் தொகுப்புகள் வினியோகிக்கப்பட்டன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கே பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிலர் பல்வேறு காரணங்களால் இந்த உதவிகளை பெற முடியாமல் விடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை வினியோகம் தொடரும் என்றும், விடுபட்டவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
