பொங்கல் விடுமுறை... சென்னை - மதுரை வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக மதுரை வழியாக சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இன்று ஜனவரி 13ம் தேதி திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, மத்திய திருவனந்தபுரம், வழியாக திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
