பொங்கல் தொடர் விடுமுறை... குவியும் கூட்டம்... குமரியில் 3 நாட்களுக்கு படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!
Jan 14, 2025, 07:09 IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டு தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் நாளை ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களிலும் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
From
around the
web