பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடக்கம்… புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!

 
பொங்கல்

புதுச்சேரியில் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் என். ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பின்னர் திங்கள்கிழமை தொடக்கம் நடத்தப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு

முதல்வர் இல்லம் அருகே உள்ள திலாசுபேட்டை ரேஷன் கடையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு பொங்கல் தொகுப்புக்கான பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டு, சில பயனாளர்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர். பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறி பொருள்களை கடையில் வைத்து பூட்டிச் சென்றனர்.

பொங்கல்

இந்த பொங்கல் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300 கிராம் நெய், 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1 பை என 6 பொருள்கள் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!