பொங்கல் ரிலீஸ் உறுதி… ‘பராசக்தி’க்கு கடைசி நேர சென்சார்!
2026 புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

நாளை வெளியாக உள்ள நிலையில், ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. சில காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் பரிந்துரை செய்ததால், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனால் நாளை (ஜன.10) படம் வெளியாகுவது உறுதியாகியுள்ளது. ‘பராசக்தி’ படம் 2 மணி 43 நிமிடங்கள் ஓடும் நீளத்தில் உருவாகியுள்ளது. ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு இன்னும் உறுதி ஆகாத நிலையில், ‘பராசக்தி’ படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு ரசிகர்களுக்கு ஒரு பெரிய படம் உறுதியானது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
