பொங்கலுக்கு 22,797 சிறப்பு பேருந்துகள்… சொந்த ஊருக்கு கிளம்ப தயாராகிட்டீங்களா? !

 
pongal
 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். அவர்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்டம் அதிகரித்தால் தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமமின்றி ஊர் செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!