ரூ1000/- ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

 
அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கும் இன்னும் சில நாட்களே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு அல்லது ரொக்கப்பணம் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு  ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன.  நடப்பாண்டு 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு   அறிவிப்பு எப்போது வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

பொங்கல்

இந்நிலையில் ஏற்கனவே வடமாவட்டங்களான   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்   மாவட்டங்களில் கனமழை  காரணமாக  பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இவர்களுக்கு  ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு, 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.  அதற்குள்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி  மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பகுதிகளில் குடும்பங்களுக்கு இதே போல்  ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை  அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொங்கல்

பேரிடர் பகுதிகளில் நிவாரணம் வழங்குவதை காரணமாக வைத்து, மாநிலத்தின் மற்ற பகுதி மக்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என  பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு போலவே, ரூ.1,000 ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை  ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.  ஜனவரி 2வது வாரம் முதல்  பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படலாம்.  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2023ல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.  மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்ட பிறகு  வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர், கார் வைத்திருப்போர் இவர்களில்  தகுதியான பயனாளிகளுக்கே மட்டுமே மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என பொதுமக்களிடையே கேள்வி  எழுந்துள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web