பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் ரூ1000 ரொக்கப்பணம்... இல்லத்தரசிகள் வரவேற்பு... !

 
பொங்கல்


தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.  அந்த வகையில்  பொங்கல் பண்டிகைக்கு  பச்சரிசி, முந்திரி, முழுக்கரும்பு ஆகியவை  பொங்கல் தொகுப்பில் இடம்பெறும்.  இத்துடன் ரூ1000   ரொக்கத்தொகை கடந்தாண்டு வழங்கப்பட்டது.   இந்தாண்டும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்புடன் ரூ1000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர்  ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

டோக்கன்

இந்த பேரிடர் வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு தேவையான நிதியை  ஒதுக்கவில்லை. இதனால் தமிழக அரசிடம் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  
தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் தமிழர்திருநாள் தைப்பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொங்கல்

தமிழகம் முழுவதும் 2,19,57,402 எண்ணிக்கையில் ரேஷன்கார்டுகளுக்கு வழங்கும் நிலையில்   பரிசு தொகையாக ரூ1000 குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  
 பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சக்கரை, முழுக்கரும்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.   இந்த டோக்கன் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.  ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாதது  பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து முதல்வர் பொங்கலுக்கு பரிசுத் தொகையாக ரூ1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web