இன்று முதல் 17ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை!
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் அங்காடி நிர்வாகக் குழு இணைந்து நடத்தும் இந்தச் சிறப்புச் சந்தை, பொதுமக்கள் பொங்கல் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் மலிவாகவும் தரமாகவும் வாங்க வழிவகை செய்கிறது. விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய ஊர்களிலிருந்து இனிப்பான கரும்புகள் குவிந்து வருகின்றன.

ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து புத்தம் புதிய மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் விற்பனைக்கு வருகின்றன. குடியாத்தம் பகுதி விவசாயிகள் கைப்படத் தயாரித்த மாவிலைத் தோரணங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.

சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏதுவாகத் தெருவிளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு காவல்துறையினர் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்புச் சந்தையிலிருந்து வெளியேறும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
