நாளை வீடுகளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்... குறிச்சிக்கோங்க!

 
பொங்கல்
 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இயற்கை, சூரிய பகவான், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் இந்தப் பண்டிகை நடைபெறுகிறது. உழவர்களும் உழவுக் காளைகளுமே இந்த திருநாளின் நாயகர்கள்.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் நாளே தை மாதப் பிறப்பு. இதையே மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி எனக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை (15.01.2026) கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வீடுகளை அலங்கரித்து தைத்திருநாளை வரவேற்பது வழக்கம்.

புதிய பானையில் புது அரிசி, பால் வைத்து பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் முழங்குவார்கள். சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் படைத்து வழிபடுவர். இஞ்சி, மஞ்சள் குலை, கரும்பு, வாழை, தானியங்கள் ஆகியவற்றையும் படைத்து விவசாயம் செழிக்க வேண்டுகின்றனர். காலை 6 மணிக்கு முன் சூரிய பொங்கல் வைப்பவர்கள் நேரம் பார்க்க தேவையில்லை. பிறகு வைப்பவர்கள் காலை 7.45 முதல் 8.45 மணி வரை, அல்லது 10.35 முதல் 1 மணி வரை பொங்கல் வைக்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!