பொன்முடியின் ஆபாச பேச்சு வருத்தமளிக்கிறது... அவர் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது... மதுரை ஆதீனம் பேட்டி!

நெல்லையில் நடைபெற்ற சம்பவம் வருத்தமாகவுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மிகுந்த கட்டுப்பாடு வளர்க்க வேண்டும், வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் என்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
சினிமாவும் அரசியலும் எடுபட்டது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டும்தான். அரசியலில் துணிச்சலில் நம்பர் ஒன் ஜெயலலிதா மட்டும் தான் என்று மதுரை ஆதீனம் மேலும் பேசுகையில் கூறினார்.
அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து கேள்வியெழுப்புகையில், “அமைச்சர் பொன்முடியின் பேச்சு வருத்தமளிக்கிறது. அவர் அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது. தங்களது அமைச்சர்கள், பேச்சாளர்களையும் எந்த சமயத்தையும் பிறர் மனது புண்படக்கூடிய வகையில் பேசக்கூடாது என்று முதல்வர் அறிவுரை கூற வேண்டும்” என்று மதுரை ஆதீனம் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!