”பொன்னியின் செல்வன் 2” முதல் பாடல்!! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

 
பொன்னியின் செல்வன்

 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற கல்கியின் நாவல்களில் ஒன்று பொன்னியின் செல்வன். இதனை எம்.ஜி.ஆர் முதல் பலர் திரைப்படமாக எடுக்க விரும்பி முயற்சி செய்தனர். இறுதியில் மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டார். அதன் படி கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன்  முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது  இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.ஏப்ரலில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை   இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கான இசை  ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏப்ரல் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5  மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன்
 படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் வேலைகள்  மும்மூரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என லைக்கா நிறுவனம் குந்தவையின் வீடியோ ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா  ஏப்ரல் 4ம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web