பூனம் குப்தா இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக நியமனம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் துணைநிலை ஆளுநராக இருந்த எம்டி பத்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி NCAER தலைமை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூனம் குப்தா துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வங்கியின் 4வது துணைநிலை ஆளுநர். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள். மேலும் பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார நிபுணர் ஆலோசனை குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!