அடுத்த மாதம் முதல் பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
சென்னையில் தற்போது முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம்–விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை–சென்ட்ரல் வழித்தடங்களில் தினசரி சேவை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

2ம் கட்டத்தில் மொத்தம் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி செலவில் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன. இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை செல்லும் வழித்தடத்தில், பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரை 15.8 கிலோ மீட்டர் தூரத்தில் அடுத்த மாதம் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட ஆய்வுகள் முடிந்துள்ள நிலையில், இறுதி ஆய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய சேவை தொடங்குவதால் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயண நேரம் பெரிதும் குறையும். முதல் கட்ட மெட்ரோ வழித்தடத்துடன் எளிதாக இணைப்பு கிடைக்கும். சாலை போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2ம் கட்ட மெட்ரோ திட்டம் முழுமையடைந்தால், சென்னை மாநகரத்தின் போக்குவரத்து வசதி மேலும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
