போப் பிரான்சிஸ் உடல்நிலை சிக்கலான நிலையிலேயே உள்ளது... மருத்துவமனை அறிக்கை!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த 22ம் தேதி ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது. ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவது உடல்நிலை தொடர்பாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது. இயந்திர உதவியுடன் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த மருத்துவ நிலைகளையும் பார்க்கும் போது அவரது உடல் நிலை இன்னும் சிக்கலான நிலையிலேயே நீடிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!