வாடிகனில் 'ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி' - போப் லியோ பங்கேற்றுச் சிறப்புரை!

 
வாடிகன் போப் லியோ

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வாடிகன் நகரில் 'ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி' என்ற தலைப்பில் இசைத் திருவிழா நடைபெற்றது. இந்தச் சிறப்பான நிகழ்வில் போப் லியோ அவர்கள் பங்கேற்று, இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்ததுடன், இது வெறும் இசை நிகழ்வு அல்ல என்று சிறப்பித்துப் பேசினார்.

போப் பிரான்சிஸ் அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சி, தற்போது 6-வது ஆண்டாக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. வீடற்ற மக்கள், புலம்பெயர்ந்தோர், சிறப்பு அனுமதி பெற்ற சிறைக் கைதிகள் உள்ளிட்டோருக்கு இசை அனுபவத்தை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த மைக்கேல் பப்லே உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர்.

இந்த இசை நிகழ்ச்சி குறித்துப் பேசிய போப் லியோ, "இது ஒரு சாதாரண இசை நிகழ்வு அல்ல. அதை விட மிகச்சிறந்த செயல். ஆன்மீக இசை ஆன்மாவை உயர்த்தக் கூடியது. மனித கண்ணியம் என்பது பொருளாதாரத்தைச் சார்ந்தது அல்ல. நாம் அனைவரும் கடவுளால் நேசிக்கப்படும் குழந்தைகள்," என்று கூறி, அங்கு கூடியிருந்த அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!