தவெகவில் இணையும் பிரபல நடிகர்?! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் போன்றோர் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது நடிகர் ஜீவா ரவி விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பின் நடிகர் ஜீவா ரவி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நான் உயிரோடு இருக்கவே செங்கோட்டையன் தான் காரணம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விஜய் சார் துணிவு ரொம்ப பிடிக்கும் அவர் சொன்னா உண்மையா செய்வாரு த.வெ.கவில் இணையப்போவதாக செங்கோட்டையனை சந்தித்த பின் சீரியல் நடிகர் ஜீவா ரவி பேட்டி ❤️❤️🥳@TVKVijayHQ pic.twitter.com/Bz21Mb0Smi
— Priya Tvk (@Tvk_priya_) December 6, 2025
மேலும் அவர், "அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். அவர் ஒரு நல்ல விஷயத்தில் இறங்கியுள்ளார். அதுவும் எங்க திரையுலகத்தைச் சேர்ந்த விஜய் சாருடன் சேர்ந்துள்ளார். நானும் கட்சியில் சேரலாம். அது அடுத்த மாதம் என்னவென்று உங்களுக்குத் தெரிய வரும்" என்று சூசகமாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "விஜய் சாரின் துணிவு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் சொன்னால் உண்மையாகவே செய்வார். நமக்கு ஒரு நல்ல தலைவர் தேவை" என்றும் கூறினார். செங்கோட்டையனின் ஆசீர்வாதமும் விஜய் சாரின் நட்பும் எப்போதும் தொடரும் என்றும் ஜீவா ரவி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
