பிரபல நடிகர் டோனி மெக்காலிஸ்டர் கைது... அமெரிக்காவில் பெரும் பரபரப்பு!
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 2015ம் ஆண்டு ஒளிபரப்பான ‘நெய்பர்ஸ் வித் பெனிபிட்ஸ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் டோனி மெக்காலிஸ்டர், கடும் சர்ச்சைகளால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜோடிகள் தொடர்பான கருத்துகளால் அந்த நிகழ்ச்சி வெறும் இரண்டு அத்தியாயங்களிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 23ம் தேதி வாரன் கவுண்டி போலீசார் டோனி மெக்காலிஸ்டரை கைது செய்தனர். அவரது கூகுள் கணக்கில் சிறுவர் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாகவும், வீட்டில் வளர்த்து வந்த இரண்டு நாய்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணைக்காக அந்த நாய்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக ஷெரிப் பாரி ரிலி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டோனி மெக்காலிஸ்டருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் சிறுவர்கள் மற்றும் விலங்குகளுடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
