பிரபல பாடி பில்டர் டிர்கா காலமானார்... பெரும் சோகம்!
ஜனவரி 5-ம் தேதி வெளியான தகவலின்படி, டிர்கா கடந்த டிசம்பர் 12-ம் தேதி உயிரிழந்ததாக சான் டியாகோ மருத்துவ பரிசோதகர் உறுதி செய்துள்ளார். இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த திடீர் மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிர்காவின் உடல்நலக்குறைவை சமையலறையில் இருந்த ஒரு நண்பர் முதலில் கவனித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது வீட்டிலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. யுஎஸ்ஏ டுடே மற்றும் டிஎம்இசட் ஆகிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அவரது மகன் பேசுகையில், “எந்த முன் உடல்நலப் பிரச்சினையும் எனக்குத் தெரியாது. அவரது மரணம் எங்களுக்கு எச்சரிக்கையின்றி வந்தது” என தெரிவித்துள்ளார். டிர்காவின் மறைவு குறித்து மேலும் விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
