பிரபல காமெடி நடிகர் திடீர் மாரடைப்பால் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
மந்தீப் ராய்

கன்னட சினிமாவில் பிரபல காமெடி நடிகர் மந்தீப் ராய். இவருக்கு வயது 72. இவர் திடீரென  மாரடைப்பால்  உயிரிழந்துள்ளார்.  கடந்த  சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த மந்தீப்  இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மந்தீப்ராய்


மும்பையில் வசித்து வந்த  மந்தீப் ராய்க்கு கன்னடம் தெரியாது என்பது பலரும் அறிந்திராத தகவல். ஷங்கரின் குடும்பம் மும்பையில் வசிக்கும் போது மந்தீப் சங்கர் நாக்கை சந்தித்து தமது நாடக ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஷங்கர் நாக்கின் வற்புறுத்தலின் பேரில் ‘மிஞ்சி ஓட’ படத்தில் நடித்தார் மந்தீப். ஆனால் ஹிந்தியில் எழுதப்பட்ட ஸ்கிரிப்டை மந்தீப்பால் புரிந்து கொள்ள முடியவில்லை . இதனால் ஓய்வு நேரங்களில் மந்தீப் கன்னடம் கற்றுக்கொண்டார்.

rip

நடிகர் சிவராம் மற்றும் ஷங்கர்நாக்கின் அம்மாவும் அவர் கன்னடம் கற்றுக்கொள்ள நிறைய உதவினார்கள். அதன்பிறகு கன்னடம் கற்றுக்கொண்ட மன்தீப், டாக்டர் ராஜ்குமார், கமல்ஹாசன், அமோல் பலேகர் உட்பட பல முண்ணனி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.  நான்கு தசாப்தங்களாக கன்னட திரைப்படத் துறையில் அசைக்க முடியாத இடத்தை பெற்றவர்.இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web