பிரபல பெண் தாதா ஜோயா கான் கைது... ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

 
ஜோயா கான்

டெல்லியின் லேடி டான் என்றழைக்கப்படும் ஜோயா கானை ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த பிரபல ரவுடி ஹாஷிம் பாபா. இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆயுதங்கள்,போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஜோயா கான்

ஹாஷிம் பாபாவின் 3-வது மனைவி சோயாகான். கணவர் ஹாஷிம் பாபா ஜெயிலுக்கு சென்றதால் அவர் செய்து வந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட சோயாகான் தொடங்கினார். அடிக்கடி ஜெயிலிலிருக்கும் தனது கணவரை பார்த்து வந்துள்ளார். அப்போது ஹாஷீம் பாபா தனது மனைவியிடம் தனது ஆட்கள் மூலம் எப்படி போதைப்பொருட்கள் கடத்துவது என்பது உள்பட பல ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, கணவரின் கூட்டாளிகளை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுத்தி ஒருபெண் தாதாவாக சோயாகான் செயல்பட்டு வந்தார். ஆனால் போலீசார் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இவர், நேரடியாக எதையும் செய்யாமல் திரைமறைவில் கணவரின் ஆட்களை இயக்கி வந்துள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான பணமும் கிடைத்தது.

போதை

இதனால் சோயாகான் ஆடம்பர வாழ்க்கை வாழ தொடங்கினார். விலை உயந்த ஆடை அணிந்து ஆடம்பர காரில் வலம் வந்தார். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னை பெரிய பெண் தொழில் அதிபர் போல வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சோயாகான் 270 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். சோயாகானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சோயாகானிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web