பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பாஜகவில் இணைப்பு!
மலையாளத் திரையுலகில் பிரபலமாக விளங்கும் நடிகையும் நாட்டியக் கலைஞருமான ஊர்மிளா உன்னி, கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அந்தக் கட்சியில் இணைந்தார். மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் உறுப்புச்சேர்க்கை பெற்றது நிகழ்ச்சிக்கு விருந்தாக அமைந்தது.

பாஜகவில் இணைந்ததையடுத்து பேசினார் ஊர்மிளா உன்னி. “எனது அரசியல் பயணத்தை பாஜகவிலிருந்து தொடங்குகிறேன். கட்சியின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நான் முழுமையாக பாடுபட உள்ளேன்,” என்று தெரிவித்தார். அவரது உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த மாதம் கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஊர்மிளா உன்னி போட்டியிடும் வாய்ப்பும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவர் நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்குவாரா என்பது குறித்து ஆர்வம் நிலவுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
