பிரபல பாடகி விண்வெளிக்குச் செல்கிறார்!

 
பாடகி

பிரபல பிண்ணனிப்பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெற்ற பாடகியான கேட்டி பெர்ரி புளூ ஆரிஜினின் என்எஸ்-31 திட்டத்தின் மூலம் புதிய வரலாறு ஒன்றைப் படைக்க உள்ளார்.


அந்தத் திட்டத்தின் மூலம் 1963ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற வலண்டீனா தெரெஸ்க்கோவாவுக்கு பின்னர் பெண்கள் மட்டும் அடங்கிய ஒரு குழுவினர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். இவர்கள் நியூ ஷெபர்ட் விண்கலம் மூலம்  செப்டம்பர் மாதத்தில் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர்.
இது குறித்து  கேட்டி பெர்ரி "எனது பயணம் எனது மகளையும் மற்றவர்களையும், நட்சத்திரங்களை எட்ட ஊக்குவிக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்கு ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவியும் மூத்த செய்தி நிருபருமான லாரன் சான்செஸ் தலைமை தாங்குவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவருடன் கேட்டி பெர்ரி, சிபிஎஸ் தொகுப்பாளர் கெய்ல் கிங், மனித உரிமைகள் ஆர்வலர் அமண்டா நுயென், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளைன் மற்றும் முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவ்  முக்கிய நபர்களும் இணைந்துள்ளனர்.இந்த விண்கலம் மூலம் ஊடகம், அறிவியல், கலை உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்கள் விண்வெளி வீராங்கனைகளாகப் பயணிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web