பிரபல சின்னத்திரை நடிகை வாஹினி காலமானார்... திரையுலகினர் இரங்கல்!
தனது யதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்த பிரபல சின்னத்திரை நடிகை வாஹினி (பத்மா) காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த நடிகை வாஹினி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். நடிகை வாஹினியின் மறைவை அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான கராத்தே கல்யாணி சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்:
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், அவர் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இன்று உயிரிழந்தார். நடிகை வாஹினி உடல்நலக் குறைவால் மட்டுமின்றி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொண்டார்: திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் சில அமைப்புகள் அவரது மருத்துவச் செலவிற்காக உதவி செய்த போதிலும், நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
தெலுங்கு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவர், தமிழிலும் சில முக்கியத் தொடர்களில் நடித்துள்ளார்: சீரியல்களில் இவர் ஏற்று நடித்த "நெகட்டிவ்" கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. கோபக்கார மாமியார் அல்லது வில்லியாகத் தோன்றினாலும், இவரது இயல்பான நடிப்பு தனித்துத் தெரிந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு குடும்பங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகமாக இவர் நீண்ட காலம் விளங்கி வந்தார்.
வாஹினியின் மறைவுக்குத் தெலுங்கு மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிறந்த கலைஞரை இழந்தது மட்டுமின்றி, அவரது போராட்டமான வாழ்க்கை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
