பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி பறிப்பு... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
ஆம்ஸ்ட்ராங் பொற்கொடி
 

தமிழகத்தில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு வீட்டுக்கு அருகேயே  படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டார்.  

ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

ஆம்ஸ்ட்ராங்

அந்த கூட்டத்தின்போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுடம் புகார் அளித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web