பிப்ரவரியில் போரூர்–பூந்தமல்லி மெட்ரோ சேவை... பயணிகள் உற்சாகம்!
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்தில் புதிதாக இயக்கப்படவுள்ள போரூர்–பூந்தமல்லி வழித்தடத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கி.மீ. நீளத்தில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி–போரூர் சந்திப்பு வரை 10 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன. பாதுகாப்பு சான்றிதழுக்கான சோதனை ஓட்டங்கள் கடந்த ஆகஸ்டில் நடத்தப்பட்டன.

இந்த வழித்தடத்தில் 10 மெட்ரோ நிலையங்களில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் தவறி தண்டவாளத்தில் விழுவதைத் தடுக்கும் வகையில் ஆள் உயர தடுப்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மூன்று முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் பூந்தமல்லியில் இருந்து போரூரை கடந்து வடபழனி வரை மெட்ரோ சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. போரூர்–வடபழனி இடையே சில நிலைய பணிகள் இன்னும் முடியாததால் கட்டகட்டமாக சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு வசதி பயணிகளுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
