“அதிகாரம் நிலையானது கிடையாது... கருணாநிதி சிலைகள் உடைக்கப்படும்” சீமான் ஆவேசம்!

 
கருணாநிதி சீமான்

அதிகாரம் என்பது நிலையானது கிடையாது. கருணாநிதியின் சிலைகள் உடைக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 

இன்று தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்திருந்த  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடையே பேசுகையில், “இந்திய மீனவர்கள் அதிகபடியாக அத்து மீறுவதாக இலங்கை அதிபர் கூறுகிறார். பல ஆயிரம் பேரை சுட்டு கொன்றுவிட்டு படகுகளை கைப்பற்றி வலைகள் கிழிக்கபடுகிறது. இதை விட என்ன கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.

சீமான்

இந்திய பெருங்கடல் என்று பெயர் இருந்தால் போதுமா? அதில் மீன் மிடிக்க முடியவில்லை. மிக சிறிய நாடு இலங்கை. அதற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது மற்றும் பரிசு கொடுப்பது என்று இருந்தால் எப்படி அவர்களை கட்டுபடுத்த முடியும்? மீனவர்கள் விவகாரத்தில் தற்போது சிறிய முன்னேற்றம் வந்திருக்கிறது. தமிழக மீனவர்கள் என்று இருந்த இடத்தில் இந்திய மீனவர்கள் என வந்திருக்கிறது. 

அறநிலையத்துறை யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது? சீமான் காட்டம்!!

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி சிலைகளும், வங்கதேசத்தில் முஜிபூர் ரஹ்மான் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது. அதே நிலை, கருணாநிதி சிலைகளுக்கு ஏற்படும். வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வரும்போது அனைத்தும் பொட்டலாகிவிடும். அதிகாரம் என்பது நிலையானது அல்ல” என்று கூறினார். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web