இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த பகுதிகளில் மாலை வரை மின் தடை!

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். ஆனால், மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற தகவலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குன்னம், அந்தூர், கல்லம்புதூர், வரகூர், நல்லறிக்கை, மேலமாத்தூர், புதுகுடிசை, கீழமாத்தூர், கொத்தவாசல் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!