அதிகாலையில் அதிர்ச்சி... பிலிப்பைன்சில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... !
இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகிஇருப்பதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதேபோன்று, பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டராக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் டிசம்பர் 28ம் தேதி பிற்பகலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் ஜப்பானின் குரில் தீவுகளில் பூமி திடீரென குலுங்கியது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 10 கி.மீ ஆழத்தில் பதிவானது. தேசிய நில அதிர்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
![]()
இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரம் வெளியே வரவில்லை. இதனிடையே கடந்த அக்டோபர் மாதமும் ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள டோரிஷிமா தீவு அருகே 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ (340 மைல்) தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இருந்தது. எனினும், இரண்டு நிலநடுக்கங்களால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
