பகீர்.. பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1000யை தாண்டலாம்! அமெரிக்கா எச்சரிக்கை!

 
துருக்கி

துருக்கியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக தகவல்கள் வெளியான நிலையில், இந்த பலி எண்ணிக்கை 1000யைத் தாண்டலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த 1999ம் ஆண்டு இதே போன்று துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 17,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. துருக்கியின் நுர்தாகி அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் பல கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதில் குறிப்பாக தென்கிழக்கு துருக்கியில் உள்ள காஸியண்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

துருக்கி

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.  கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 53-க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

துருக்கியைத் தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 45க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

துருக்கி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web