17 வயது மாணவி கர்ப்பம்… இளைஞர் மீது போக்சோ வழக்கு!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி வீரகனூர் அரசு பள்ளியில் படித்து வந்தார். திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியதால், அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.

இந்த சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினர்.

விசாரணையில் 24 வயது இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. அதனால் மாணவி கர்ப்பம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
