பிரதான் நீங்கள் தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது... அன்பில் மகேஷ் பதிலடி!

 
தர்மேந்திர பிரதான்


 
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2ம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அமர்வின் போது எம்பி கனிமொழியுடன் நடந்த காரசாரமான விவாதத்தின் போது தர்மேந்திர பிரதான் “முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி எனக் கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்குகின்றனர் ” என பேசியிருந்தார்.அதற்கு திமுக சார்பில் எம்பி கனிமொழி, மற்றும் முதல்வர் முகஸ்டாலின் NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என விளக்கமும் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திடீரென நேற்று தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைத்தள பக்கங்களில் திமுக எம்.பி.க்கள் மற்றும் முதல்வர்  ஸ்டாலின் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் நிறுவுவதற்கான தமிழ்நாட்டின் ஒப்புதல் குறித்து நாடாளுமன்றத்தில் நான் தவறான தகவல் நான் அளித்ததாக குற்றம் சாட்டி இருந்தனர். 
அந்த குற்றச்சாட்டுகள் மீது எனக்கு உடன்பாடு இல்லை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 2024 மார்ச் 15ம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் கடிதத்தை கொண்டு வந்து இருக்கிறேன்” என கூறி அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதனைப்பார்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  ” தர்மேந்திர பிரதான் நீங்கள் தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.தமிழ்நாடு தொடர்ந்து NEP 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ்


நாங்கள்  மார்ச் 15ம் தேதி எழுதிய அந்த கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக எந்த இடத்திலும் கூறவில்லை. இதற்காக தனியாக குழு ஒன்று அமைக்கப்படும் அந்த குழு விசாரணை முடித்தது.   மற்றபடி எங்களுடைய முடிவிலும் நாங்கள் மாற்றமில்லாமல் தான் இருக்கிறோம்.
NEPஐ கட்டாயமாக்க நினைப்பவர்களும், தமிழகத்தின் கல்வி மரபையும் பண்பாட்டையும் மாற்ற நினைப்பவர்களும் அரசியல்களத்தில் தான் விளையாடுகிறார்கள். தமிழகத்திற்கு சிறந்த கல்வி முறையை தமிழகமே தேர்வு செய்ய உரிமை உள்ளது என்பதை ஏற்று ஆதரித்தால், தமிழகத்தின் மாணவர்கள் மற்றும் எதிர்காலத்துக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்” எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web