பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கினால் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன்... பிரசாந்த் கிஷோர்!

 
பிரசாந்த் கிஷோர்
 

 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (JSP) கடும் தோல்வியை சந்தித்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் கூட காப்பாற்ற முடியாமல் போன நிலையில், “எக்ஸ்-ஃபாக்டர்” என்று கணிக்கப்பட்டிருந்த பிரசாந்த் கிஷோருக்கு இது மிகப் பெரிய பின்னடைவு எனப் பார்க்கப்படுகிறது.

தோல்விக்கு பிறகு தனது முதல் எதிர்வினையில், “இந்தத் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பு. மக்களை எங்கள் பக்கம் இழுக்க முடியவில்லை. எங்கோ தவறிவிட்டோம்” என்று அவர் தைரியமாக ஒப்புக்கொண்டார். மேலும், தனது தவறுக்குப் பிராயச்சித்தமாக நவம்பர் 20-ஆம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் முழுவதும் மௌன விரதம் இருப்பதாகவும், பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமார் அரசு தேர்தலின்போது பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்குவதாக அறிவித்த வாக்குறுதியே தனது கட்சிக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியதாகவும், “அந்த தொகை அறிவிக்கப்படவில்லை என்றால் நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கும் மேல் வெல்லாது” என்றும் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்ல, “வாக்குறுதிப்படி 1.5 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினால், நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என்றும் சவால் விட்டார். தோல்வி இருந்தாலும் பின்வாங்க மாட்டோம், தவறுகளைத் திருத்தி மீண்டும் வலிமையுடன் வருவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!