#Get Out இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்... தவெக விழா மேடையில் சலசலப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 வது ஆண்டு தொடக்கவிழா இன்று மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த்துடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவின் தொடக்கத்தில் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கெட் அவுட் என்ற பெயரில் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, இரண்டாவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கையெழுத்திட்ட நிலையில், மூன்றாவதாக பிரசாந்த் கிஷோரை கையெழுத்திட ஆதவ் அர்ஜுன் அழைத்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!