நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு … 14 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
pirathiksha pirathiksha

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரதியுஷா, சித்தார்த்தா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி இருவரும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மறுநாள் பிரதியுஷா உயிரிழந்தார். சித்தார்த்தா ரெட்டி உயிர் தப்பினார். அவர்கள் குடித்த குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி பல குற்றச்சாட்டுகள் முன்வைத்தார். இதையடுத்து சித்தார்த்தா ரெட்டிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2004ம் ஆண்டு கீழ்நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகளாக குறைத்து அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். நீண்ட விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி சித்தார்த்தா ரெட்டி 4 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!