மக்கள் விஜய்யை அரசியல் சக்தியாகவே பார்க்க தொடங்கியுள்ளனர்... பிரவீன் சக்கரவர்த்தி!
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் வெளியிடும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் சீட்கள் வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுவது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் விருப்பம் காட்டுவதாகவும் பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனால் காங்கிரஸ்–தவெக கூட்டணி வாய்ப்பு அதிகரித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பலவீனமாகி வருவதாகவும், அதனை வலுப்படுத்த கூடுதல் சீட்கள் கேட்பது தவறில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் விஜய்யை நடிகராக அல்ல, அரசியல் சக்தியாகவே பார்க்க தொடங்கியுள்ளதாக கூறினார். விஜய்யை சந்தித்தது உண்மைதான் என்றும், தனிப்பட்ட முறையிலும் சந்திக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார். கூட்டணி முடிவுகளை காங்கிரஸ் தலைமைதான் எடுக்கும் என்றும், தமிழக கடன் நிலை குறித்து தான் கூறியது தவறாக திரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
