வரதட்சிணையால் பிரபல யூடியூபருக்கு கொடூரம்... 5 மாத கர்ப்பிணியாக சராமாரியாக கத்தியால் குத்திக் கொலை...!
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி (24), தனது கணவராலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோருட்லாவைச் சேர்ந்த ஹரிபாபு (28) என்பவரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு வைஷ்ணவி திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ஒரு புதிய யூடியூப் சேனலைத் தொடங்கி, அதில் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவிட்டு வந்தனர். இவர்களின் காதல் வாழ்க்கைக்குச் சாட்சியாக வைஷ்ணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், ஹரிபாபுவின் வீட்டில் நிலவி வந்த சொத்துத் தகராறு காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார் . இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, வைஷ்ணவியிடம் அவரது வீட்டிலிருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி ஹரிபாபு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிபாபு வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் வைஷ்ணவியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

கத்திக் குத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வைஷ்ணவி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், கொலையாளி ஹரிபாபு தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். காதல் திருமணம் செய்து, ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய ஒரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
