கர்ப்பிணி பெண் தற்கொலை... அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் மீட்பு!
திருச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக எலி மருந்து குடித்துத் தற்கொலைக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் சேவியர். இவரது மனைவி ரோஸி (வயது 25), எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த ரோஸி, எலி மருந்து விஷத்தைக் குடித்துள்ளார். இதனால் வீட்டில் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டுத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோஸிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பெற்று வந்த ரோஸியின் உடல்நலம் மோசமடைந்த நிலையில், மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த குழந்தையின் நிலையை ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக, குழந்தை ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்டது. துரித நடவடிக்கை: தாயின் உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாகச் சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை உயிருடன் மீட்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு ஓர் ஆண் குழந்தை உயிருடன் பிறந்தது. ஆனால், குழந்தையை மீட்ட சில மணி நேரங்களிலேயே ரோஸி சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடும்பப் பிரச்சினை மற்றும் தற்கொலைக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
