கடும் வெயிலால் கர்ப்பிணி உயிரிழப்பு!! 7 கிமீ நடந்து சென்றதால் சோகம்!!

 
பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

இந்தியாவின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. காலை 11 மணி முதல்  மாலை 4 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெயிலில் நடந்தே மருத்துவமனை சென்றதால் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் ஒசர் வீரா பழங்குடியின கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயது  சோனாலி வாகத். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு  கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக்  குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார்  

வெயில்

இதனால் அவர் மட்டும் தனியாக 3.2 கிமீ தூரம் நடந்தே நெடுஞ்சாலைக்கு வந்தார்.  அங்கிருந்து ஆட்டோ மூலம் தவா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் ஆட்டோ மூலம் சிறிது தூரம் சென்று, அங்கிருந்து 3.2 கி.மீ. நடந்து வீட்டுக்கு சென்றுள்ளார். கொளுத்தும் கோடை வெயிலில் 7 கி.மீ தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்றதால்  கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அவரை காசாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டனர். 

கர்ப்பிணி
அங்கு இருந்து குடும்பத்தினர் உடனே கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் மூலம் காசா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்தது. கர்ப்பிணி பெண் 7 கி.மீ வெயிலில் நடந்ததால் உடல்நலம் மோசமாகி உயிரிழந்ததாக மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண் வெயிலில் நடந்ததால் உயிரிழந்திருப்பது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web