கர்ப்பிணி பெண் சிசுவுடன் உயிரிழப்பு... செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் சோகம்... !

 
9 வயது சிறுமி வயிற்றில் சிசு..!! அதிர்ச்சி அடைந்த பெற்றோர்..!!

 
திண்டுக்கல் மாவட்டத்தில்  சிங்காரகோட்டை பகுதியில் வசித்து வருபவர்  கோபி. இவர் கேரள மாநிலத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி30 வயது ஜாகிரா . இவர்களுடைய மகள் 4 வயது  பெண் குழந்தை.  இந்நிலையில், இன்று காலை கர்ப்பிணியாக இருந்த ஜாகிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர்.

திண்டுக்கல்
அங்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள்  யாரும் இல்லாத நிலையில், செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.  திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு ஜாகிராவை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள சிசுவுடன் உயிரிழந்து விட்டதாக  கூறியுள்ளனர்.

இந்நிலையில், பெண் மற்றும் சிசு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்படுள்ளது. இது குறித்து பெண்ணின் சகோதரர் மற்றும் தாய்  காலைல 6 மணிக்கு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். திடீரென எனது மகள் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் வயிற்றை பிடித்து செவிலியர்கள் அமுக்கினர்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

அடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுடன் குழந்தையும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்  கூறினார்கள். இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கும் நடைபெறக் கூடாது. உடனடியாக 3 செவிலியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அழுதுகொண்டே கூறினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web