கர்ப்பிணி கொலை வழக்கில் உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை!

 
கள்ளக்காதலி கள்ளக்காதலி

கேரளாவில் திருமணமான ஒரு தொழிலாளி தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளிக்கு ஏற்கெனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டாவது குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை விதித்து ஆலப்புழா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபீஷ் (37) என்பவருக்கும், அனிதா (32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பிரபீஷுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி உண்டு. அனிதா இந்தக் கள்ளக்காதலில் கர்ப்பமானதால், பிரபீஷைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனால் பிரபீஷ், தனது மற்றொரு கள்ளக்காதலியான ஆலப்புழை கைநகரியைச் சேர்ந்த ரஜனி (38) என்பவருடன் சேர்ந்து அனிதாவைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

உல்லாசம் சொகுசு ஹோட்டல் பாலியல் பலாத்காரம் இன்ஸ்டாகிராம் பாலியல் பலாத்காரம் இளம்பெண் கல்லூரி மாணவி

அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, ரஜனி, அனிதாவின் வாயைப் பொத்திக் கொள்ள, பிரபீஷ் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபீஷுக்கு, ஆலப்புழா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் கடந்த நவம்பர் 23ஆம் தேதி தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ரஜனி, நேற்று (நவம்பர் 30) ஆலப்புழா மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி அவருக்கும் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இன்னொரு கள்ளக்காதலி என இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!