"விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு கர்ப்பிணிகள், முதியோர் வர வேண்டாம்" - செங்கோட்டையன் வேண்டுகோள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் பிப்ரவரி 13ம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைப்பு, வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் நிர்வாகிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், கூட்டத்திற்கு வருபவர்களின் நலன் கருதி சில முக்கிய வேண்டுகோள்களை முன்வைத்தார். இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். கூட்ட நெரிசலையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்தக் கூட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்திற்கு வரும் அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சேலத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும்" என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், நல்லாட்சி வழங்கவும் 2026-ல் விஜய் நிச்சயம் முதலமைச்சர் நாற்காலியில் அமருவார் என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.
சென்னையில் தவெக நிர்வாகிகள் சிலர் திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துக் கேட்டபோது, "இது திமுகவின் தோல்விப் பயத்தையே காட்டுகிறது. மக்கள் இதற்குக் காலத்தில் சரியான பதில் அளிப்பார்கள்" என்று அவர் விமர்சித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
