வயிற்று வலியால் துடித்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ... கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 
அமுல்ராஜ் அமுல்ராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர் திடீர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஐந்து மாதக் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.

கர்ப்பிணி மாணவி

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது அம்பலமானது. பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அந்த நபரைத் தேடி வந்தனர்.

போக்சோ நீதிமன்றம்

தற்போது அந்தப் புகாரில் தொடர்புடைய கும்பகோணத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ  உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கர்ப்பமான இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!