அதிமுக, திமுக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை இல்லை... பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதுவரை தேமுதிக, பாமக மற்றும் ஓபிஎஸ் அணி தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தேமுதிக அதிமுக–பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்துகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதேபோல், திமுக கூட்டணியுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் இதற்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது தவறான தகவல்.

எங்கள் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியையே தேமுதிக அமைக்கும். எப்போது கூட்டணி அறிவிக்க வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசித்தே தீர்மானிக்கப்படும்” என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
