தொண்டர்கள் அதிர்ச்சி... ஒரே நாளில் 2 EX. எம்எல்ஏக்கள் விலகல்... காலியாகும் தேமுதிக கூடாரம்!

 
தேமுதிக


தமிழகத்தில் தேர்தல் 2026ல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை கட்டமைத்து வருகின்றன. இதனையடுத்து அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. அந்த வகையில் தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு  அனுப்பியுள்ளார். 

தேமுதிக
அதில்  எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


இதேபோன்று தே.மு.தி.க கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பியும் தேமுதிக உயர்மட்ட குழு பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தன்னை விடுவிக்காவிடில் தானே பதவியிலிருந்து விலகுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரே நாளில் இரு முக்கிய புள்ளிகள் தேமுதிக கட்சியில் இருந்து விலகியது பிரேமலதா விஜயகாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web