பொங்கலுக்குப் பின் கூட்டணி பேச்சு வார்த்தை … 9ம் தேதி முடிவு அறிவிப்பு... பிரேமலதா விஜயகாந்த்!
பொங்கலுக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணி குறித்து மாநாட்டில் அறிவிப்பதற்கான முன்னோட்டமாகவே இந்த ஆலோசனை நடந்ததாக கூறினார். அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள்தான் என்றார்.

தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அட்டைப் பெட்டியில், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்துகளை மாவட்ட செயலாளர்கள் எழுதி போட்டுள்ளதாக கூறினார். அந்த கருத்துகளை தனிப்பட்ட முறையில் படித்து, மாவட்ட மக்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதன்படி வரும் 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி அறிவிக்கப்படும் என பிரேமலதா கூறினார். இந்த நிமிடம் வரை எந்த கட்சியும் இறுதி கூட்டணியை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலே தற்போதைய முன்னுரிமை என்றும், தொண்டர்கள் விரும்பும் கூட்டணியே அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
