விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி… பிரேமலதா விஜயகாந்த்!

 
பிரேமலதா

சிவகாசியில் தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் விஜயகாந்தின் கோட்டை என அவர் குறிப்பிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜயபிரபாகரன் போட்டியிடுவார் என்றும், மக்களவைத் தேர்தலில் அவரது வெற்றி பறிக்கப்பட்டதாகவும் பிரேமலதா தெரிவித்தார். இந்த முறை அவரது வெற்றி உறுதி செய்யப்படும் என்றார். சிவகாசி தொகுதி குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் சீனப் பட்டாசுகளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விஜயகாந்தின் தொண்டர்கள் இருக்கும் வரை தேமுதிகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் உறுதியாக பேசினார். தாங்கள் விரும்பும் கூட்டணியுடன்தான் இணைவோம் என்றும், 2026 தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!